மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 5 நிமிடத்தில் சுமார் ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு
அமெரிக்க ராணுவத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தம் மீது நீதிமன்ற இடைக்காலத் தடை விதித்ததை தொடர்ந்து மைக்ரோசாப்டின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.
இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 5 நிமிடத்தில் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் முக்கியமான தகவல்களையும், ரகசியங்களையும் சேமித்து வைப்பதற்கான 71 ஆயிரத்து 120 கோடி ரூபாய் தொழில்நுட்ப ஒப்பந்தத்தைப் பெற மைக்ரோசாப்டும், அமேசானும் போட்டியிட்டதில் ஒப்பந்தம் மைக்ரோசாப்டுக்கு அளிக்கப்பட்டது.
அதிபர் டிரம்பின் தலையீட்டின் பேரில்அது வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய அமேசான், ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால் மைக்ரோசாப்ட் ஐந்து நிமிடத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இழப்பை சந்தித்தது.
Comments