மனிதர்களின் சராசரி வாழ்நாள் அதிகரிப்பு..காரணம் என்ன.?
அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது.
வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர்.
மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ உலகின் அபார வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது 79 ஆண்டுகளாக உள்ளது. இதற்கு வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள பலகட்ட முன்னேற்றம் காரணம் என கூறப்படுகிறது.
டைனோசர், மேமூத் போன்ற ராட்சத உயிரினங்களை போல பிரமாண்ட மனிதர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புகள் சராசரி மனித உயரத்திலேயே இருந்துள்ளன. கடந்த நூற்றாண்டில் அமெரிக்காவில் வாழ்ந்த Robert Pershing Wadlow 8 அடி11 அங்குல உயரம் இருந்துள்ளார். இவர் தான் வரலாற்றில் இதுவரை உயரமான மனிதர் என பதிவு செய்யப்பட்டுள்ளார்.
19-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களை விட இந்த நூற்றாண்டில் வாழ்பவர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கர்களின் சராசரி ஆயுட்காலம் 47 ஆண்டுகள். தற்போது அது 79-ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இந்தியாவில் 1960-ம் ஆண்டு பிறந்தவர்களின் சராசரி வாழ்நாள் 40 ஆண்டுகள். தற்போது இது 68-ஆக உயர்ந்துள்ளது.
மனித உயிர்களுக்கு சவால் விட்ட பல கொடிய நோய்களை இன்றைய நவீன அறிவியல் மற்றும் மருத்துவம் கட்டுப்படுத்தியுள்ளன. பெரியம்மை நோய் இந்த உலகை விட்டே காணாமல் போயுள்ளது. போலியோவிற்கு தடுப்பு மருந்து உள்ளது. புதுப்புது வைரஸ்கள் மனித உயிரை பறித்தாலும், ஒரு கட்டத்தில் அவற்றிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் மருத்துவம் காரணமாக மனிதர்களின் சராசரி ஆயுள் அதிகரித்து கொண்டே வருவதை கண்கூடாக காண முடிகிறது.
Comments