இறுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் 6.13 கோடி வாக்காளர்கள் !

0 2406

இறுதி வரைவு வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி, தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்களர்கள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண் வாக்காளர்களும் 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து தொள்ளாயிரத்து 69 பெண் வாக்காளர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 317 வாக்காளர்களும் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக துறைமுகம் தொகுதி ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 337 வாக்காளர்களுடன் உள்ளது.

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39 லட்சத்து 46 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியின்போது, 18, 19 வயதுடையவர்கள் 5 லட்சத்து 85 ஆயிரத்து 580 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http//elections.tn.gov.in என்ற இணைய முகவரிக்குள் சென்று வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தேர்தல் பதிவு அலுவலர்களை நேரடியாக சந்தித்து படிவங்களை பூர்த்தி செய்து பெயரை இணைத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

www.nvsp.in என்ற இணைய முகவரிக்குள் சென்றும் பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாக்காளர் உதவி செயலி என்ற செயலி மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments