3 மாதங்களில் சீனாவின் அலிபாபாவுக்கு லாபம் ரூ.2312 கோடி

0 1580

சீனாவின் பிரம்மாண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா (Alibaba ) டிசம்பருடன் முடிந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 312 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

இது 2018ன் இதே காலகட்டத்தை விட 38 சதவிகிதம் அதிகமாகும். இதில் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு லாபவிகிதமாக 770 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹுவா (Xinhua ) தெரிவித்துள்ளது.

சீனாவின் சில்லறை வர்த்தகத்தில் அலிபாபாவின் வாடிக்கையாளர்கள் மூன்றரை கோடி அதிகரித்து 71 கோடி  என்ற உச்சத்தை தொட்டுள்ளது. அதை போன்று ஹாங்காங் மற்றும் நியூயார்க் இரண்டு பங்குசந்தைகளிலும் பட்டியலிடப்படும் முதலாவது சீன இணையதள நிறுவனம் என்ற சாதனையையும் அலிபாபா படைத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments