திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு இல்லாமல் லட்டு வழங்க முடிவு
திருப்பதி ஏழுமலையான் கோவில் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிபாரிசு கடிதங்கள் இல்லாமல் 200 ரூபாய் கட்டணத்தில் பெரிய லட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடை மற்றும் 5 சிறிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தன. சமீப காலமாக அவை ரத்து செய்யப்பட்டு இலவசமாக ஒரு சிறிய லட்டும், சிபாரிசு கடித்தத்தின் பேரில் 200 ரூபாய்க்கு பெரிய லட்டுகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அதனை மாற்ற முடிவெடுத்த தேவஸ்தானம், இன்று முதல் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப 200 ரூபாய் கட்டணத்தில் பெரிய லட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகிறது. அதேபோன்று 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வடையையும் 200 ரூபாயாக விலை உயர்த்தி வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
Comments