ஆளுநர் உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

0 583

புதுவையில் அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அரிசிக்கு பதிலாக பணம் என்ற ஆளுநர் உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இலவச அரிசுக்கு பதிலாக பணமாக பயணாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்படி அம்மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயேன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

புதுச்சேரி அமைச்சரவை தீர்மானத்தை மீறி துணைநிலை ஆளுநர் செயல்படுவதாக முதலமைச்சர் தரப்பில் வாதிடப்பட்டது. யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர உரிமையில்லை என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments