அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

0 1013

கட்டுமான தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கே அம்மா உணவகத்தை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவக திட்டத்துக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையிலும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவக திட்டத்தை செயல்படுத்துவதற்காக “இலாப நோக்கமற்ற” ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவக திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூக பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்கு முகமை சேகரிக்கும் எனவும், அம்மா உணவகங்களுக்கு தொடர்ந்து மானிய விலையில் உணவு பொருட்களை அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments