கோவை குண்டுவெடிப்பு நிகழ்வின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி
கோவை குண்டு வெடிப்பு நிகழ்வின் 22ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாநகர் முழுவதும் 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 200 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்து அமைப்புகள் சார்பில் ஊர்வலங்கள், அஞ்சலி கூட்டங்கள் நடைபெறுகின்றன.
அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்க, மாநகரில் விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் 3 ஆயிரத்து 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிர சோதனைகளுக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Comments