பிரதமர் மோடி- டிரம்ப் சந்திப்பு: ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள்
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தின்போது ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவுக்கு விற்பதற்கான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இதையொட்டி18 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான 24 பல்நோக்கு MH-60R Seahawk ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் 11 ஆயிரத்து 379 கோடி ரூபாய் மதிப்பிலான ஏவுகணை எதிர்ப்பு தளவாடங்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.
ஒரு லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 114 F-15EX Eagle fighter ஜெட் விமானங்களையும் போயிங் நிறுவனம் விற்க முன்வந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் ஆகியோரின் சந்திப்பின்போது இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்ட அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லிக்திசைர் நேற்று இந்தியா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments