துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழப்பு
சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள இட்லிப் மாகாணத்தில், துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் உயிரிழந்தனர்.
இப்பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வரும் நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்திவருகிறது. கடந்த வாரம் இட்லிப் பகுதியில் சிரிய ராணுவம் நடத்திய இரண்டு தாக்குதல்களில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்கள் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரிய வீரர்கள் 55 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஆதரவுடன் துருக்கி படைகளும், ரஷியா ஆதரவுடன் சிரிய படைகளும் நடத்திவரும் இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
Comments