இந்தியப் பொருளாதாரம் முன்பை விட பலவீனமாக உள்ளது - IMF
இந்தியப் பொருளாதாரம் முன்னர் கணித்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்திய பட்ஜெட் குறித்தும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த ஜெர்ரி, தற்போதைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த அவசரகால நிதித்துறை சீர்திருத்தங்கள் தேவை என்று குறிப்பிட்டார். குறிப்பாக இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 4 புள்ளி 8 விழுக்காடாக சர்வதேச நிதியம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments