டிரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத் நகராட்சி நிர்வாகம் சார்பில் காந்தி நகரில் இருந்து அகமதாபாத் வரை 500 முதல் 600 மீட்டர் தூரத்திற்கு சுவர் எழுப்பப்பட்டு வருகிறது.
6 முதல் 8 அடி உயரம் வரை கட்டப்பட்டு வரும் இந்தச் சுவர், அங்குள்ள குடிசை குடியிருப்புகளை மறைக்கவே கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை ஒப்புக் கொண்டுள்ள பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர், கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னர் அங்கு பூச்செடிகள் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். சரணியவாஸ் என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments