மொத்தமே 12 நிமிடங்கள் தான்..! மவுனம் கலைத்த கொளத்தூர்மணி
2008-ஆம் ஆண்டு சீமானை சந்திக்க விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், மொத்தமே 12 நிமிடங்கள் தான் சீமான் உள்ளிட்ட திரையுலகினரை அவர் சந்தித்தார் எனவும் கொளத்தூர் மணி மவுனம் கலைத்துள்ளார்.
சென்னையில் நடந்த பாலுமகேந்திரா நூலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், தான் இலங்கைக்குச் சென்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்த போது, அவர் பாலுமகேந்திராவை பார்க்க வேண்டும் என்று அழைத்து வரச் சொன்னதாக தெரிவித்தார்
ஏ.கே.74 ரகத் துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்தது முதல், பல்வேறு விதமான உணவுகளை பரிமாறியது வரை பிரபாகரன் உடனான தனது அனுபவங்களை கடந்த காலங்களில் சீமான் தெரிவித்திருந்தாலும், ஈழத்தமிழரும் சீமானுக்கு முன்பே பிரபாகரனை நன்கு அறிந்தவருமான பாலுமகேந்திராவை, தன்னிடம் கேட்டதாக சீமான் கூறி இருப்பது பொய் என்றும் மொத்தமாகவே 12 நிமிடங்கள் மட்டுமே நடந்த சந்திப்பை சீமான், மிகைப்படுத்தி தெரிவிப்பதாகவும் கொளத்தூர் மணி சுட்டிக்காட்டி உள்ளார்
ஆரம்ப காலத்தில் திராவிடர் கழக மேடையில் சீமானை மேடையேற்றியவர்களில் கொளத்தூர் மணி முக்கியமானவர். மேலும் சீமானுக்கு முன்னரே விடுதலைபுலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் கொளத்தூர் மணி என்பது குறிப்பிடத்தக்கது.
Comments