இந்திய வங்கிகளிடம் வாங்கிய அசல் பணத்தை திருப்பித் தர தயார் - விஜய் மல்லையா

0 1831

இந்திய வங்கிகள் தனக்கு அளித்த கடன்தொகை முழுவதையும் வங்கிகள் எடுத்துக் கொள்ளலாம் என தொழிலதிபர் விஜய் மல்லையா கெஞ்சிக் கேட்டுள்ளார்.

வங்கிகளில் 9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக அவர்மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானபின், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தான் எந்தவிதமான பண மோசடியிலும் ஈடுபடவில்லை என்று கூறிய அவர், இந்திய வங்கிகளிடம் தான் மன்றாடிக் கேட்டுக் கொள்வதாகவும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய அசல் தொகையில் 100 சதவீத பணத்தையும் தான் திரும்பக் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments