100 நாள் வேலைதிட்டத்தின் சமூக தணிக்கை பிரிவின் இயக்குனர் பணிக்கான அரசாணை ரத்து

0 1027

100 நாள் வேலைத்திட்டம் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க சமூக தணிக்கை பிரிவின் இயக்குனர் பணிக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சமூக தணிக்கை குழுவின் இயக்குனரை அரசு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில், தகுதி நிர்ணயிக்கப்பட்டு வெளியான அறிவிப்பாணையை ரத்து செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம் மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தோடு, சமூக தணிக்கை துறையில் அனுபவம் பெற்றவரே இப்பணிக்கு வரவேண்டும் என கூறி அறிவிப்பாணையை ரத்து செய்தது.

மேலும் விதிமுறைகளை பின்பற்றி தகுதிகளை நிர்ணயித்து, 8 வாரங்களில் புதிய அறிவிப்பாணையை வெளியிடவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments