பயணிகள் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் கட்டணங்களை நிர்ணயிக்க சுதந்திரம் - ரயில்வே வாரியம்

0 4041

பயணிகள் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப கட்டணங்களை நிர்ணயித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

பயணிகள் நலன் கருதி இந்திய ரயில்வேயில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 1,500 முதல் 2000 ரயில்கள் இணைக்கப்படவிருப்பதாக தெரிவித்த ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ், அந்த அளவுக்கு கூடுதல் ரயில்களை அரசால் நிர்வகிக்க முடியாது என்பதால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில்களுக்கு கட்டண வரம்பு நிர்ணயிப்பது குறித்து இதுவரை அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை என்று அவர் கூறினார்.

விமானப் போக்குவரத்துத்துறையில் உள்ளது போல, பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில் நிறுவனங்கள் சந்தை நிலவரத்தைச் சார்ந்து தாங்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY