கொரோனா தாக்குதலால் சீனாவில் பொருளாதார-வர்த்தகம் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக கச்சா எண்ணெயின் தேவை குறைந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் கச்சா எண்ணெயின் தேவை தினசரி 3 லட்சத்து 65 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று தெரிவித்துள்ள சர்வதேச எரிசக்தி முகமை, கடந்த மாதம் கணிக்கப்பட்டதில் இருந்து இது 30 சதவிகிதம் குறைவு என்றும் கூறியுள்ளது.
இதனிடையே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. Brent கச்சா எண்ணெயின் விலை 1 புள்ளி 3 சதவிகிதம் குறைந்து, பேரலுக்கு 55 புள்ளி 08 டாலராக உள்ளது.
கொரானா தாக்கத்தால் சர்வதேச கச்சா எண்ணெயின் தேவை தினசரி 2 லட்சத்து 30 ஆயிரம் பேரல்களாக குறையும் என்று எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான OPEC ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments