போரூர் ஏரியில் குப்பையை கொட்டுவோருக்கு அபராதம் - தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்
சென்னை போரூர் ஏரியில் குப்பைகளை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், போரூர் ஏரியின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பு பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பு, பொதுப்பணி துறை, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டது. யார் குப்பைகளை கொட்டுகிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த தண்டனையும் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், இதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையாக வழங்கவேண்டும் என்றும் அக்குழுவுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Comments