இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கொரானா வைரஸ் பரவாமல் தடுக்க எல்லைப் பகுதிகளிலும் விமான நிலையங்களிலும் தீவிர சோதனைக்கு பிரதமர் அலுவலகமும், சுகாதார அமைச்சகமும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்தியாவில் அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நிகழும்பட்சத்தில், அதை எதிர்கொள்ள தேவையான மருந்துகள் அரசால் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
ஜப்பான் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் இருக்கும் இந்திய மாலுமிகளுக்கு உதவி செய்வதில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தியாவில் தனிமை வார்டில் கண்காணிக்கப்பட்ட 402 பேருக்கு வைரஸ் பாதிப்பில்லை எனத் தெரிய வந்திருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஹர்சவர்த்தன் கூறினார்.
Comments