சேவைப் பிரிவின் மெத்தனத்தால் உயிருக்கு போராடிய மாணவன் பலி

0 637

காஞ்சிபுரத்தில் மூச்சுத் திணறலால் உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர் தனது கடைசி நிமிடங்களில் தானே 108 ஆம்புலன்சை அழைத்தும் வராததால் மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நடராஜன் - சுமதி தம்பதியின் மகன் கணேஷ்குமார் பி.பி.ஏ. 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு மூச்சிரைப்பு நோய் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் மைதானத்துக்கு விளையாடச் சென்ற இவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உதவி கோரி அவரே 108 ஆம்புலன்ஸ் சேவையை செல்ஃபோன் மூலம் அழைத்த ஒலிப்பதிவு வெளியாகியுள்ளது.

ஆம்புலன்ஸ் வராததால் மூச்சுத் திணறல் அதிகரித்து கணேஷ்குமார் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அவரது செல்ஃபோனை பெற்றோர் ஆய்வு செய்த போது 108 சேவைப் பிரிவுடனான உரையாடல் பதிவானது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments