தமிழகத்திற்கான தொகையை விடுவிக்க கோரிக்கை

0 1046

தலைநகர் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, தமிழகத்தின் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி ஆணையம் வழங்கப்பட வேண்டிய ஆறாயிரத்து 374 கோடியே 69 லட்சம் ரூபாய் மானிய தொகையை விடுவிக்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடியாக செல்ல விமான சேவையும், துபாய்க்கு செல்லும் பன்னாட்டு விமான சேவையையும் தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அதேபோன்று, கோவை விமான நிலையம் விரிவாக்கும் பணிக்காக  கூடுதலாக 5.76 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை மறுபரீசிலனை செய்ய தமிழக முதலமைச்சர் சார்பில் கோரிக்கை வைத்ததாகவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments