மக்களுக்கு பாதிப்பு இல்லாத பட்சத்தில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் - அமைச்சர் கருப்பணன்

0 864

பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே கடலூரில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் குறைந்த தண்ணீரில் சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் கார் சுத்தம் செய்யும் முறையையை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் செயல்திட்ட அறிக்கை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு மக்கள் கருத்திற்காக வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments