கேஸ் சிலிண்டர் வெடித்து மேற்குவங்க மாநில தம்பதி உயிரிழப்பு
சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்த மேற்குவங்க மாநில தம்பதி, சமையல் செய்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் சர்தார் தனது மனைவி கிருஷ்ண சர்தாருக்கு ஆயிரம்விளக்கு பகுதி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை ரயில் மூலம் சென்னை வந்தனர்.
அங்குள்ள குடியிருப்பில் வீடு எடுத்து தங்கிய இருவரும், சமைப்பதற்காக அங்கிருந்த கேஸ் அடுப்பை பற்றவைத்தபோது கசிவு ஏற்பட்டு சிலிண்டர் வெடித்தது. இதில் உடலில் தீப்பிடித்து பலத்த காயம் அடைந்த இருவரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு நேற்று இரவு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments