ஹபீஸ் விவகாரத்தை இந்தியா உன்னிப்பாக கவனிக்கிறது: அரசு வட்டாரங்கள் தகவல்
ஜமா உத் தவா தலைவன் ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பயங்கரவாத நிதியுதவி தொடர்பான 2 வழக்குகளில், ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தானில் தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அரசு வட்டாரங்கள், பாரீசில் 16ம் தேதி முதல் நடைபெறவுள்ள பயங்கரவாத நிதி தடுப்பு அமைப்பு (FATF) கூட்டத்தில், பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகவும், அதிலிருந்து தப்பும் வகையில் இத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இதை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்தன. ஹபீஸ்க்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படுகிறதா என்பதை இந்தியாவும், பிற நாடுகளும் உன்னிப்பாக கவனிப்பதாகவும் அரசு வட்டாரங்கள் கூறின.
Comments