எத்தனை முறை சிறை வைத்தாலும் வேறு கட்சிக்கு செல்லப் போவதில்லை - கே.சி.பழனிச்சாமி
தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதாக இதுவரை எழுத்துபூர்வமாக தனக்கு கடிதம் கொடுக்கப்படவில்லை என முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதன் பிறகும் கட்சியின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் முறைகேடாக பயன்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், எத்தனை முறை சிறை வைத்தாலும் தான் அ.தி.மு.க. தான் என்றும், வேறு கட்சிக்கு செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
Comments