பல மடங்கு ஆபத்தாக இப்போதும் நீடிக்கும் மெக்சிகோ எண்ணெய் கசிவு

0 1341

மெக்சிகோ வளைகுடாவில் 10 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட Deepwater Horizon ஆழ்கடல் எண்ணெய் கசிவு, நிபுணர்கள் கூறியதையும் விட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக இப்போதும் நீடிப்பதாக பிரபல விஞ்ஞான பத்திரிகையான Science Advances journal ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2010 ல் ஏற்பட்ட இந்த கசிவு அமெரிக்காவின் எண்ணெய் கிணறு வரலாற்றில் மிகவும் மோசமான ஒரு அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக டிரான்ஸ்ஓசியன் லிமிட்டட் ((Transocean Ltd)) மேற்கொண்ட ஆழ்கடல் எண்ணெய் கிணறு திட்டத்தில் விபத்து ஏற்பட்டு 11 பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், சுமார் 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணைய் கடலில் பரவியது.

இந்த நிலையில் எண்ணெய் கசிவு கணக்கிடப்பட்டதையும் விட 30 சதவிகிதம் அதிகம் என்று இந்த ஆய்வை நடத்திய மியாமி பல்கலைக்கழக கடலாராய்ச்சி பேராசிரியர் கிளேரி பாரிஸ் லிமோஸி தெரிவித்துள்ளார். சாட்டிலைட் படங்களை மட்டும் நம்பாமல் கடல் நீரை ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments