டால்பின்கள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் 14 லட்சம் ரூபாய் பரிசு

0 797

அமெரிக்காவில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 2 டால்பின்கள் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புளோரிடா மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் உடல்கள் கரை ஒதுங்கின. உயிரிழந்த 2 டால்பின்களும் துப்பாக்கியால் சுடப்பட்டு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் அவற்றின் உடலில் இருந்ததாக தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments