மகளிர் பெண் விடுதி காப்பாளர், ஆண் விடுதி காப்பாளர் மீது கண்ணீர் மல்க பாலியல் புகார்

0 2309

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த மகளிர் விடுதி  பெண் காப்பாளர் ஒருவர், ஆண் விடுதி காப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன்னிடம் மனைவி போல் நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாக பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள அவர், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.

வீடியோவில் கண்ணீர் மல்க பேசி வெளியிட்ட அந்த பெண்ணின் பெயர் லட்சுமி. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வரும் இவர், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் விடுதி காப்பாளர் முருகேசன் மீது தான் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

முருகேசன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராகவும் பொறுப்பு வகித்து வரும் நிலையில் அதில் லட்சுமியும் உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது முருகேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு சங்கத்தில் வெளியேறியதாக லட்சுமி கூறியுள்ளார்.

முருகேசன் தன்னிடம் மனைவி போல் நடந்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், அதற்கு உடன்படாத்தால் அவதூறாக உயர் அதிகாரிகளுக்கு 25 முறை புகார் மனு அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்துள்ள லட்சுமி, இதனால் மன உளச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும், கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தேசிய பெண்கள் பாதுகாப்பு மையம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், போலீசாரிடம் புகார் செய்தால் ஆதாரம் கேட்பதாக லட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே லட்சுமியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள முருகேசன், தன்னிடம் இருந்து பணம் பறிக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்றும், சில நபர்கள் மூலம் தன்னிடம் ரூபாய் 5 லட்சம் வரை பேரம் பேசி வருவதாகவும் பதிலுக்கு புகார் தெரிவித்துள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருவதால் துறை ரீதியாக விசாரணை நடத்தி உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த துறை சார்ந்த பிற ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments