அண்டார்டிகாவில் மால்டா நாடு அளவுக்கு உடைந்த பெரியபனிப்பாறை
அண்டார்டிகாவில் மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை கடலுடன் இணைக்கும் பல்வேறு பனிப்பாறைகளில் பைன் ஐலண்ட் கிளேசியரும் ஒன்று. பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக இந்த கிளேசியர் கடந்த 25 ஆண்டுகளில் உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த கிளேசியரில் இரு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது பைன் லாண்ட் கிளேசியர் உடைவது மற்றும் சிறு துகள்களாக சிதைவது தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சாட்டிலைட் மூலமான ராடார் படங்களைக் கொண்டு பனிப்பாறை எவ்வாறு உடைகிறது என அனிமேஷன் மூலம் விளக்கப்பட்டுள்ளது.
Comments