வேலை நாட்களில் மாற்றம்..! மகாராஷ்டிரா அரசு ஊழியர்களுக்கு குஷியோ குஷி
அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களை தவிர ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே அரசு ஊழியர்கள் பணி செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.
அந்த வரிசையில் தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலமும் இணைந்துள்ளது. சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசின் முதலமைச்சராக உள்ள உத்தவ் தாக்கரே அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என அறிவித்ததுடன், இந்த புதிய நடைமுறை 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பணி நேரம் மேலும் 30 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 9.45 மணி முதல் மாலை 6.15 மணி வரை அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
Comments