குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரும் வழக்கு - இன்று தீர்ப்பு
குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்த முக்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
குற்றப்பின்னணி உடையவர்களுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் வழங்கக்கூடாது என்று பாஜக முன்னணித் தலைவர்களில் ஒருவரான அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய வழிகாட்டல்களை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறும் அவர் தமது மனுவில் கோரியிருந்தார்.
இது தொடர்பான விசாரணையில், அரசியலில் இருந்து கிரிமினல்களை அகற்றுவது குறித்த வலிமையான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதுடன் கிரிமினல் வேட்பாளர்கள் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த விசாரணையில், கிரிமினல் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை வெளியிடும் முயற்சியில் போதிய பலன் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
Comments