தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து கால அவகாசம் நீட்டிப்பு

0 934

தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அந்தஸ்து பெறுவதற்கான கால அவகாசத்தை வரும் 17-ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க அண்ணா பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்தை புதுப்பித்துக்கொள்வது கட்டாயமாகும்.

அதன்படி, 2020 - 2021-ம் கல்வியாண்டில், இணைப்பு அந்தஸ்து நீட்டிப்பு, புதிய படிப்புகளைத் தொடங்க அனுமதி கோருதல், மாணவர் சேர்க்கை போன்ற நிகழ்வுகளுக்கு அண்ணா பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான அவகாசம் கடந்த 10-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், அந்த அவகாசத்தை வரும் 17-ம் தேதி வரை நீட்டித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், அதற்குள் விண்ணப்பிக்கத் தவறினால் 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் பிப்ரவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments