7 நாட்கள் நாடகத்திருவிழா

0 834

புதுச்சேரி ஆரோவில்லில் டெல்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில் 7 நாட்கள் நடைபெறும் நாடகத்திருவிழா நேற்று தொடங்கியது.

உலகின் தலைசிறந்த நாடகப்பயிற்சி பள்ளிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நாடகப்பள்ளியானது கடந்த 1959ல் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நாடகப்பள்ளியில், நாடகத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த நாடகப்பள்ளியின் சார்பில் நடத்தப்படும் 7 நாட்கள் நாடகத்திருவிழா நேற்று தொடங்கியது.

7 நாட்களும் உலக புகழ்பெற்ற 7 நாடகங்கள் நடைபெறுகிறது. அதன்படி முதல் நாளான நேற்று பாஸ்கரப் பட்டேளரும், தொம்மியுடே ஜீவிதமும் என்ற பிரபல மலையாள நாடகம் நடைபெற்றது.

திரைப்பட நடிகர் நாசர், நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களின் நடிப்பை கண்டுகளித்ததோடு, மாணவர்கள் மத்தியில் சிறப்புரையும் ஆற்றினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments