ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்ட வீரர்

0 367

போர்சுக்கலை சேர்ந்த அலை சறுக்கு வீரர் ஒருவர் ராட்சத அலையில் சிக்கி, தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்தார்.

நசாரேவில் (nazare) நடைபெற்று வரும் அலைசறுக்கு போட்டியில் போர்சுக்கலை சேர்ந்த அலெக்ஸ் போட்டெல்ஹோ (alex botelho) எனும் அலை சறுக்கு வீரர் பங்கேற்று இருந்தார். போட்டியின் போது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் விழுந்தார். அவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வரும் பணியில் அவரது பார்டனர் ஹுகோ வூ (Hugo Vau) ஈடுபட்டிருந்தார்.

ஹுகோ வூ சிறிய படகை ஓட்டி செல்ல, படகின் பின்பகுதியை பிடித்தவாறே அலெக்ஸ் போட்டெல்ஹோ கரை திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது பின்னால் எழும்பிய ராட்சத அலை இருவரையும் படகோடு தூக்கி வீசியது.

இந்த விபத்தில் சிக்கிய அலெக்ஸ் போட்டெல்ஹோ கரையில் மயங்கி நிலையிலே மீட்கப்பட்டார். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments