கல்லூரி மாணவி விடுதியில் தூக்கு போட்டு தற்கொலை

0 1199

தேனியில் அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்ற நர்சிங் மாணவியின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இக்கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து மாணவி ஒருவர் கல்லூரி விடுதி அறையில் தூக்கில் தொங்கியபடி நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டார். கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவி தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள், மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி கல்லூரி முதல்வரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சமரசம் ஏற்படாத நிலையில், மாணவியின் உறவினர்கள் மருத்துவமனை முதல்வர் குடியிருப்பு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். சம்பவம் குறித்து அறிந்த க.விலக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments