பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமை ஆசிரியர் புதிய முயற்சி

0 1259

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, வீதி வீதியாகச் சென்று பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்தார்.

துவாக்குடிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர் மேள தாளத்துடன் கல்விசீர் கொண்டுவந்தனர். அவர்களோடு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கருணாம்பாளும் இணைந்து அரசுப் பள்ளிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.

எனவே தனியார் பள்ளிகளை தேடி ஓடாமல் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்குமாறு கேட்டுகொண்ட தலைமை ஆசிரியர், அதனைப் பாடலாகப் பாடி உற்சாகப்படுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments