ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று
ஆபிரகாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கெண்டகியில் பிறந்தவர். ஏழ்மை குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை தாமஸ் லிங்கன், தச்சர் தொழிலை செய்து வந்தார். குடும்ப ஏழ்மையில் சரிந்த ஆபிரகாம் சரியாக படிக்க முடியவில்லை.
தனது 22 வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்தார். பின் கடை வைத்து வியாபாரத்தில் தோல்வியை தழுவினார். அடுத்து அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல்காரராக வேலை பார்த்தார். பிறகு வழக்கறிஞராக இருந்தார். பின்னர் 1849-ம் ஆண்டு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
அடிதட்டு மக்களின் அடிமை தனத்தினை ஒழிக்க ஆபிரகாம் லிங்கன் தனது சிறு வயதிலே அதற்கான வழி முறைகளை கண்டறிய முற்பட்டார். அதற்கென அரசியலில் ஈடுபட்டு தனது கருத்துகளை பொதுமக்களிடம் பரப்பி வந்தார். மக்களிடையை பெரும் எழுச்சியை உருவாக்கினார்.
1860 –ம் ஆண்டு அமெரிக்கவின் 16 வது அதிபதிராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்து இனி அமெரிக்காவில் அடிமைகள் இருக்க கூடாது என பிரகடனம் செய்தார்.
லிங்கனின் மக்களாட்சி குறித்த கருத்துகள், அடிமைத்தன ஒழிப்பு மக்களிடையை பெரும் எழிச்சியை உண்டாக்கியது.
” மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி ”
என்னும் இவரின் இந்த கருத்து மிகவும் குறிப்பிடத்தக்கது
1864 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்டார். பதவியேற்ற ஒரு வருடத்தில் துப்பாக்கி முனையில் சுட்டு கொள்ளபட்டு தனது 56 வயதில் உயிர் இழந்தார்.
Comments