குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை அறிவிக்க கோரி நிர்பயாவின் தாய் கண்ணீர்விட்டு கதறல்

0 1453

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவிக்க கோரி நீதிமன்றத்தில் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீர்விட்டு அழுதார்.

குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. குற்றவாளி பவன் குப்தா சார்பில் வாதிட வழக்கறிஞர் இல்லை என்று கூறப்பட்டதை அடுத்து, அவருக்கு சட்ட உதவி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், 7 ஆண்டுகளாக போராடுவதாகவும், 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கோரி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்றத்தில் கதறி அழுதார். இதையடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நிர்ணயிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments