குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

0 1225

9,882 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 19-ம் தேதி தொடங்குவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அந்த தேர்வில் 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்க உள்ளது. தேர்வர்கள் அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அரசு இசேவை மையங்கள் வழியாக பிப்ரவரி 18-ம் தேதிக்குள் பதிவேற்ற செய்ய வேண்டும்.

கலந்தாய்வின்போது தேர்வர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்படும். தரவரிசைப்பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வுக்கு சுமார் 11,500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதம் தேர்வர்களின் மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments