சைக்கோ படத்தில் ஒரு முடியும் இல்லை..! மிக்ஸ்“ஜின்” ஆன மிஷ்கின்
ஒரு தடவைக்கு மேல் படத்தை பார்பவர்கள் வேலையில்லாதவர்கள் என்றும், தான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதற்கு அதில் ஒன்றும் இல்லை என்றும் இயக்குனர் மிஷ்கின் காட்டமாக விமர்சித்துள்ளார்.
பெண் இயக்குனர் ப்ரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் தேசிய விருது பெற்ற பாரம் படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழாவில் பேசிய சைக்கோ இயக்குனர் மிஷ்கின், தனது சைக்கோ படத்திற்கு வினோதமான முறையில் மார்க்கெட்டிங் செய்தார்.
எந்த நடிகனும் அந்த காதாபாத்திரமாகவே வாழமுடியாது என்றும், அப்படி என் படத்தில் எவனாவது சொன்னால் வெளியே போடான்னு சொல்லிடுவேன் என்று கொதித்தார் மிஷ்கின். தான் இயக்கிய சைக்கோ படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்த்ததாக ஒரு ரசிகன் தெரிவித்ததாகவும், அவனுக்கு வேலையில்லை என்று சாடிய அவர், ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதற்கு அந்த படத்தில் ஒரு தலைமுடி கூட இல்லை என்று காட்டமாக தெரிவித்தார்
நீண்ட நாட்களுக்கு பின்னர் செவ்வாய்கிழமை தான் மது அருந்த வில்லை என்றும் மது அருந்தி இருந்தால் பாரம் படத்தை இயக்கிய பெண் இயக்குனர் வீட்டுக்கு சென்று காலில் விழுந்திருப்பேன் என்றும் கூறினார்.
தேசிய விருது பெற்ற படங்கள் எல்லாம் நல்ல படங்கள் அல்ல என்றும் பெறாத படங்கள் எல்லாம் கெட்ட படங்கள் அல்ல என்றும் இயக்குனர் ராம் தெரிவித்தார்.
படத்தை பாராட்டி நாலு வார்த்தை நல்லதாக பேசுவார்கள் என்று அழைத்து வரப்பட்ட நிலையில் மிஸ்கின் ,ராம் ஆகியோரின் படங்கள் போலவே அவர்களது பேச்சும் அமைந்திருந்ததாக அழைத்து வந்தவர்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.
Comments