ஐபிஎஸ் அதிகாரியின் வரதட்சணை கொடுமை.! மறுப்பு தெரிவித்த அதிகாரி அப்பா

0 1862

500 சவரன் நகை, 4 கோடி ரூபாய் பணத்தை வரதட்சணையாக கொடுத்தும் வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக, மருமகள் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென ஐபிஎஸ் அதிகாரியின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

கேரளாவில் பணியாற்றி வரும் ஆனந்திற்கும், சென்னையை சேர்ந்த அருணா என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் விமர்சையாக நடந்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே நகை, பணம் கொடுத்தும் தனது தந்தையின் பெயரில் உள்ள உணவகத்தையும் வரதட்சனையாக கேட்டு, கணவர் துன்புறுத்துவதாக 2 தினங்களுக்கு முன்பாக அருணா போலீசில் புகாரளித்தார். இதை மறுத்துள்ள ஆனந்தின் தந்தை ராஜகுரு, வரதட்சணையாக எந்த பணத்தையும், நகையையும் தாங்கள் பெறவில்லை என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments