காமராஜர் பல்கலை.யில் விடைத்தாள் மாயமான விவகாரத்தில் 15 பேர் இடமாற்றம்

0 792

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களுக்கு முன்பு விடைத்தாள் கட்டு மாயமாகி தற்போது மீட்கப்பட்ட விவகாரத்தில் துணை பதிவாளர் உள்ளிட்ட 15பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் திண்டுக்கல் சேக்ரட் ஹார்ட் கல்லூரியில் நடந்த பிஎஸ்சி இரண்டாம் செமஸ்டர் தேர்வு விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இதனால் அவற்றை திருத்தாமல் மீதம் உள்ளவற்றுக்கு ரிசல்ட் அறிவிக்க வேண்டும் என்று துணைவேந்தரை பேராசிரியர்கள் அணுகியுள்ளனர்.

அதற்கு மறுத்த அவர், அவற்றை கண்டுபிடிக்க உத்தரவிட்டதன்பேரில், பல்கலைக்கழக பேருந்தில் இருந்து மீட்கப்பட்டது. இந்த விவகாரத்தில் துணைப் பதிவாளர் அன்புச்செல்வன், பேராசியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 15 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments