தீவிபத்தில் சிக்கிய மனைவி : காப்பாற்ற முயன்ற கணவருக்கு 90 சதவீதம் தீக்காயம்

0 1601

ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிபத்தில் சிக்கிய மனைவியை காப்பாற்ற முயன்ற இந்திய இளைஞர், 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

உம் அல் குவைன்(Umm Al Quwain) நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த அனில் நினான்(Anil Ninan), தனது மனைவி நீனு(Neenu) மற்றும் 4 வயது மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை குடியிருப்பின் நடைபாதையில் உள்ள மின்சாரப்பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த நீனுவும் அவரை காப்பாற்றுவதற்காக வீட்டின் படுக்கையறையில் இருந்த ஓடிவந்த அனிலும் தீவிபத்தில் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதில் 10 சதவீதம் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மனைவி நீனுவும் 90 சதவீத தீக்காயங்களுடன் அனிலும் அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments