நிதி முறைகேடுகளை தடுப்பதில் ஆர்.பி.ஐ.க்கு முக்கிய பங்கு : குடியரசு தலைவர்
நாட்டில், நிதி முறைகேடுகளை தடுப்பதற்கான மிக முக்கிய பங்கு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு இருப்பதாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.
தேசிய வங்கி மேலாண்மை நிறுவனத்தின், பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய குடியரசு தலைவர் இதனைக் கூறியிருக்கிறார். நிதி முறைகேடுகளை களைவதில், தடுத்தாள்வதிலும், மேம்பட்ட ஒழுங்குமுறை அமைப்பாக ரிசர்வ் வங்கி திகழ வேண்டும் என்றார்.
இதன்மூலம், நாட்டின் நிதி அமைப்பும், வங்கிகளும், மேலும் வலுவானதாக மாறும் என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கி வைப்பு நிதிக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 5 லட்ச ரூபாயாக, மத்திய அரசு அதிகரித்திருப்பதன் மூலம், சிறு சேமிப்பாளர்களிடம் நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சப்பட்டிருப்பதாகவும், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.
Comments