பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்குகளில் ஜமா உத் தவா பயங்கரவாத அமைப்பு தலைவன் ஹபீஸ் சயீதுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீது. அவனுக்கு எதிராக தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு தொடுக்கப்பட்ட 2 வழக்குகளில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (Anti terrorism court )பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ஹபீஸ் சயீதுக்கு தலா ஐந்தரை ஆண்டுகள் சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
Comments