2019ம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படத்திற்கான விருதை வென்ற புகைப்படக்கலைஞர்

0 1950

ஆள்நடமாட்டம் இல்லாத லண்டன் சுரங்க நடைபாதையில் இரண்டு எலிகள் சண்டையிட்டுக் கொள்ளும் புகைப்படம் 2019 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றுள்ளது.

சிதறி கிடக்கும் உணவு துணுக்குகளை கைப்பற்று வதற்காக எலிகள் இரண்டும் சண்டையிடும் காட்சி, போட்டியிட்ட 48 ஆயிரம் புகைப்படங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிப்பெற்றுள்ளது.இந்த புகைப்படத்தை எடுப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சுரங்க நடைப்பாதையாக சென்று சரியான ஷாட்டுக்காக காத்திருந்ததாக வெற்றியாளர் சாம் ரோவ்லி(Sam Rowley) விவரித்துள்ளார்.

image

லண்டனில் அருங்காட்சியகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் புகைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்கள் வாக்கு அடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments