திருமங்கையாழ்வார் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு
தஞ்சை செளந்தரராஜபெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கையாழ்வார் சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள செளந்தரராஜபெருமாள் கோவிலுக்குச் சொந்தமான திருமங்கையாழ்வார் உலோக சிலை, 1957- 1967 காலக்கட்டத்தில் காணாமல்போனதாக புகார் எழுந்தது. இதன் பேரில், புலன் விசாரணை அதிகாரியாக சந்திரசேகரன் என்பவர் நியமிக்கப்பட்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் லண்டன் அஸ்மோலீன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலையொன்றின் புகைப்படம், காணாமல்போன திருமங்கையாழ்வார் சிலை புகைப்படத்துடன் 100 சதவிகிதம் ஒத்துப்போவதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிலையை மீட்டுக்கொண்டுவரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Comments