பிப் 15 முதல் 29 வரை பாஸ்டாக் ஸ்டிக்கர்கள் இலவசம்

0 1283

சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் கட்டண வசூலை அதிகரிக்கும் நோக்கில், வரும் 15 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதிவரை வாங்கப்படும் பாஸ்டாக் ஸ்டிக்கர்களுக்கான விலை 100 ரூபாயை தள்ளுபடி செய்வதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் வாகன உரிமையாளர்கள் அவற்றின் பதிவு ஆவணங்களுடன் சென்று அங்கீகரிக்கப்பட்ட பாயின்ட் ஆஃப் சேல்ஸ் மையங்களில் பாஸ்டாக்கை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பொதுச்சேவை மையங்கள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் பாஸ்டாக்கை பெற்றுக் கொள்ளலாம்.

தங்களுக்கு அருகில் உள்ள பாயின்ட் ஆஃப் சேல்ஸ் மையங்கள் குறித்து  MyFASTag ஆப்பை தரவிறக்கம் செய்தோ, www.ihmcl.com என்ற இணையதளத்திலோ தெரிந்து கொள்ளலாம். அதே சமயம் பாஸ்டாக் முன்வைப்புத் தொகை, கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments