கூலித் தொழிலாளிக்கு ரூ.12 கோடி ரூபாய் பம்பர் பரிசு

0 2064

கேரள அரசின் புத்தாண்டு -கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு 12 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கண்ணூர் மாவட்டம் மல்லூரில் உள்ள தொலம்பரா பகுதியை (Tholambra in Maloor) சேர்ந்த 58 வயதான பெருனோன் ராஜன் (Perunnon Rajan) கூத்துபரம்பா (Koothuparamba) எனுமிடத்தில் அந்த லாட்டரி சீட்டை வாங்கியிருந்தார்.

கடந்த 10ம் தேதி பரிசுத் தொகை அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, ராஜனுக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாய் விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பரிசு விழுந்த லாட்டரியை குடும்பத்தினருடன் வந்து கண்ணூரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கியில் பணமாக மாற்றுவதற்கு செலுத்தினார்.

பணப் பிரச்னையில் தவித்த அவர், லாட்டரி விழுந்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். வரி பிடித்தம் போக ஏழரை கோடியே 20 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments