உண்ண தேங்காய்...! குடிக்க மழை நீர்...! கடலில் 32 நாள் திகில் பயணம்
பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலில் 32 நாட்கள் தேங்காயை உண்டும் மழைநீரை குடித்தும் சிறுமி உள்பட 4 பேர் உயிர் பிழைத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கார்டரெட் (Carteret Islands) தீவுகளில் கொண்டாடுவதற்காக பப்புவா நியூ கினியாவின் பூகெய்ன்வில் (Bougainville) இருந்து 12 பேர் கொண்ட குழு படகில் புறப்பட்டது.
நடுக்கடலில் பயணிக்கும் போது கடல்சீற்றம் காரணமாக படகு நிலைதடுமாறி கவிழ்ந்ததில் கைக்குழந்தை உள்பட 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 12 வயது சிறுமி, ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் மட்டும் கவிழ்ந்த படகை சரிசெய்து உயிர்பிழைத்தனர்.
அவர்களின் படகு திசை மாறி கடலின் நீரோட்டத்தில் 32 நாட்களாக மிதந்து நியூ கலிடோனியா (New Caledonia) அருகே வந்த போது மீனவர்களால் மீட்கப்பட்டது.
Comments